Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மல்லையா நாடு கடத்தப்படுவாரா? – இறுதிகட்ட விசாரணைகள் ஆரம்பம்

In இந்தியா
Published: 05:39 GMT, Dec 4, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Puvanes
mallya001

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொர்பான வழக்கின் இறுதிகட்ட விசாரணைகள் இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆரம்பமாகின்றன.

அதன்படி தொடர்ந்து டிசம்பர் 14ஆம் திகதி வரை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படன் பின்னர், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றினைத் திரும்பச் செலுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையா இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

இந்தநிலையில் அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடுகடத்த வேண்டும் என இந்திய அரசு, இங்கிலாந்து அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்ததோடு, மல்லையா நாடு கடத்தப்படவேண்டும் என லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணைகள் இன்று ஆரம்பிக்கின்றன.

மத்திய அரசு சார்பாக இங்கிலாந்து வழக்கு சேவைமைய சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளதோடு, மல்லையா சார்பாகவும் கிளேர் மாண்ட்கோமெரி எனும் பிரபல வழக்கறிஞர் முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடரவும் மல்லையா தரப்பு முன்னாயத்தங்களைச் செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg