Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரோட் அமைப்பின் முன்னெடுப்பில் விழிப்புணர்வு

In இலங்கை
Updated: 08:44 GMT, Dec 4, 2017 | Published: 08:37 GMT, Dec 4, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : JudeDanish
201712021259335165_1_Disabled-Persons._L_styvpf

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக பணியாற்றுகின்ற நிறுவனங்கள், மற்றும் மாவட்ட சமூக சேவை திணைக்களம் ஆகியவற்றுடன் சேர்ந்து வரோட் அமைப்பு இதனை முன்னெடுத்திருந்தது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஏ9 வீதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை இலகுவாக்குதல் மற்றும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் ஆகியவை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் வரோட் அமைப்பின் தலைவர் அருட்தந்தை கிறிஸ்டி மற்றும்,  சுமார் 100 இற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)