Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் மர்மச்சாவு! – விசாரணையை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

In இந்தியா
Published: 08:59 GMT, Dec 4, 2017 |
0 Comments
1372
icon_com
This post was written by : Puvanes
jeya_high001

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஆர்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களும் மர்மங்களும் உள்ளன. எனவே அதனை மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

குறித்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விசாரணையை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்தால் அதற்காக அமைக்கப்பட்டுள்ள விரசாரணை ஆணையகத்தினை நாடாமல் ஏன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதி மனுதாரரை கண்டித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி தான் முன்வைத்த மனுவினை வாபஸ்பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜெயலலிதா மரணத்தை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் தனி விசாரணை ஆணைக்குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg