Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வானிலை அவதான நிலையத்தின் செயற்பாடுகள் மேம்படுத்தப்படும்: லக்ஷ்மன்

In இலங்கை
Published: 10:06 GMT, Dec 4, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Ravivarman
luxman-kiriyella

சீரற்ற காலநிலை தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏற்படவிருந்த அழிவுகளை குறைத்துக் கொள்ள முடிந்ததாகவும், அந்நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை ஏற்படவிருந்த சீரற்ற காலநிலை தொடர்பில் காலநிலை அவதான நிலையம் முன்னரே பொதுமக்களை அறிவுறுத்தி வந்தது.

கடற்தொழிலாளர்களையும், கடற்படையினரையும் அவதானமாக செயற்படுமாறு எச்சரித்திருந்தது. தற்போது வானிலை அவதான நிலையத்திற்கு தேவையான நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதால் காலநிலை மாற்றம் பற்றிய தகவல்களை துல்லியமாக தெரிவிக்க முடிந்தது.

எனினும் எதிர்காலத்தில் மேலும் வானிலை அவதான நிலையத்தினை நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)