Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து மீது கல் வீச்சு: ஐவர் கைது!

In இலங்கை
Updated: 10:20 GMT, Dec 4, 2017 | Published: 10:20 GMT, Dec 4, 2017 |
0 Comments
1377
This post was written by : Ravivarman

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பேரூந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே, மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவத்தில் பேரூந்தின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதோடு, பயணிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஐவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg