Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் 10 இலட்சம் பேர்!

In இலங்கை
Published: 02:43 GMT, Dec 5, 2017 |
0 Comments
1273
icon_com
This post was written by : Puvanes
idcard001

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் பத்து இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பத்து இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகளோ அல்லது உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களோ கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறானவர்களில் ஏழு இலட்சம் பேர் வயோதிபர்கள் எனவும், குருநாகல் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் அடையாள அட்டைகள் இல்லாமல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க கருத்து தெரிவித்தபோது, வயோதிபர்கள் தமக்கு தேவையான அத்தியவசிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை இதனாலேயே இந்த நிலைஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நடமாடும் சேவைகள் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை ஆட்பதிவு திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)