Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

In
Updated: 04:13 GMT, Dec 5, 2017 | Published: 04:13 GMT, Dec 5, 2017 |
0 Comments
1268
This post was written by : Suganthini

பிரதான 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால்; விதிக்கப்பட்ட பயணத்தடையை முழுமையாக அமுல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஆனால் சாட், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட உத்தரவுகள் இன்னும் சட்டரீதியான சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பதவியேற்ற பின்னர், பயணத்தடை தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவின் மூன்றாவது வரைவை இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகின்றது.

இது தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்துவரும் 9 நீதிபதிகள் அடங்கிய குழுவில், 7 நீதிபதிகள் இந்தப் பயணத்தடை மீதாக கீழவை நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த உத்தரவை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நீதிபதிகளான ரூத் படேர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர் ஆகியோர் மட்டுமே, ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த பயணத்தடை தொடர்பாக கீழ் நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த தடை உத்தரவு   தடை தொடர வேண்டுமென்பதற்கு ஆதரவாக இருந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு, அமெரிக்காவுக்கு 6 முஸ்லிம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளை இலக்குவைத்து பயணத்தடையை விதித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg