Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாவேயில் புதிய அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்

In
Published: 05:52 GMT, Dec 5, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Suganthini

சிம்பாவேயில் முக்கியமான  3 அமைச்சுப் பொறுப்புகளுக்கு புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூவர், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

நிதியமைச்சராக பற்றிக் சைனமாசாவும் (Patrick Chinamasa), வெளிவிவகார அமைச்சராக மேயர் ஜெனரல் சிபூசிஸோ மோயோவும் (Sibusiso Moyo), காணி விவகார அமைச்சராக ஏயார் மார்ஷல் பெரன்ஸ் ஷிரியும் (Perrance Shiri) புதிய ஜனாதிபதி எம்மெர்சன் மனங்கவ்வா (Emmerson Mnangagwa) முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி றொபர்ட் முகாபே, தனது மனைவி கிரேஸ் முகாபேயை துணை ஜனாதிபதியாக்கும் நோக்கில், ஏற்கெனவே துணை ஜனாதிபதியாக இருந்த எம்மெர்சன் மனங்கவ்வாவை அண்மையில் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.

இதனையடுத்து, கடந்த நொவம்பர் மாதம் 15ஆம் திகதி அந்நாட்டில் ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், கடுமையான அழுத்தத்துக்கு மத்தியில் 37 வருடங்களாக ஆட்சி வகித்துவந்த முகாபே தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 24ஆம் திகதி சிம்பாவேயின் புதிய ஜனாதிபதியாக எம்மெர்சன் மனங்கவ்வா பதவியேற்றார்.

இதனையடுத்து, முக்கிய அமைச்சுப் பொறுப்புகளுக்கு சிரேஷ்ட ராணுவ உத்தியோகத்தர்களை, புதிய ஜனாதிபதி நியமித்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)