Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: பும்ராவுக்கு முதல்முறையாக வாய்ப்பு

In கிாிக்கட்
Updated: 07:10 GMT, Dec 5, 2017 | Published: 07:10 GMT, Dec 5, 2017 |
0 Comments
2128
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் மூலம் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டிகளில் இதுவரை விளையாடிவந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா அறிமுகமாகிறார். மேலும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர மற்றொரு விக்கெட் காப்பாளரான பார்திவ் பட்டேலும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி விபரம் பின்வருமாறு:

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, சஹா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி , உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, பார்திவ் பட்டேல்.

இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg