Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவின் கணவர் மாதவன் உட்பட 60 பேருக்கு அழைப்பாணை

In இந்தியா
Published: 07:53 GMT, Dec 5, 2017 |
0 Comments
1775
icon_com
This post was written by : Elakkiya
201712050731263061_Jayalalithaa-death-Inquire-into-60-people-including-her-J_SECVPF

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் ஜெ. தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்ட 60 பேருக்கு விசாரணை ஆணையகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மேற்படி அழைப்பாணையை அனுப்பியுள்ளது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு இருவர் என்ற அடிப்படையில், விசாரணை நடத்தவும் ஆணையகம் முடிவு எடுத்துள்ளது.

நாளை (புதன்கிழமை) ஆணையகம் முன்பு ஆஜராகுமாறு எம்.ஜி.ஆர்.-அம்மா-ஜெ.தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆனூர் ஜெகதீசன், எம்.ஜி.ஆர்.-அம்மா-ஜெ.தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், சமூக ஆர்வலர் ராமசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உட்பட நூற்றுக்கணக்கானோர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விசாரணை ஆணையகத்துக்கு அனுப்பிவைத்த பிரமாண பத்திரம் மற்றும் முறைப்பாட்டு மனுவை அடிப்படையாக கொண்டு மேற்படி அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)