Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம்: மேலதிக முன்னேற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பு

In
Published: 07:52 GMT, Dec 5, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Suganthini

பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் மேலதிக முன்னேற்றங்களைச் செய்ய முடியுமென்று நம்புவதாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன் க்குளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை பிரஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) அவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து, ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் இம்மாத இறுதியில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இதற்கு முன்னராக, பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்கும்; வகையில், பிரித்தானியாவுடன் மேலதிக முன்னேற்றங்களைச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்’ என்றார்.

மேலும், ‘பிரதமர் தெரேசா மேயுடனான சந்திப்பின்போது நிதிச்சலுகை, சட்டமூலம், குடியுரிமை, அயர்லாந்து எல்லைப் பிரச்சினை ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், இரு தரப்பினர்களும் உரிய முறையில் ஒப்பந்தத்தை எட்டத் தவறியுள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)