Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்தின் அனுமதியுடன் சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை பெறமுடியும் – மேயர்

In
Published: 08:23 GMT, Dec 5, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Suganthini

அயர்லாந்து அனுமதியளித்தால், சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானியா பெற்றுக்கொள்ள முடியுமென, லண்டன் மேயர் ஸாதிக் ஹான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சென்றுள்ள அவர், அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட டுவீட்டர் செய்தியிலேயே, இதனைக் கூறியுள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘அயர்லாந்து அனுமதியளித்தால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தில் பிரித்தானியா இடம்பிடிக்கும் வகையில் சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

‘இவ்வாறான ஒப்பந்தம் காரணமாக லண்டனில் பத்தாயிரக்கணக்கான வேலைகளைப் பாதுகாக்க முடியுமென்று  எதிர்பார்த்துள்ளோம்’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவுக்கும் அயர்லாந்துக்குமிடையில் கடுமையான எல்லை இல்லையென்பதை உறுதிப்படுத்துவதற்காக, பிரெக்சிற்றுக்குப்  பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒழுங்குமுறைச் சீரமைப்பில் அயர்லாந்தை வைத்திருப்பதற்கு ஏற்கெனவே பிரித்தானியா இணங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, லண்டனின் மேயரின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)