Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்து எல்லை: உடன்பாட்டை எட்ட பிரதமர் தெரேசாவுக்கு வலியுறுத்து

In
Updated: 08:59 GMT, Dec 5, 2017 | Published: 08:53 GMT, Dec 5, 2017 |
0 Comments
1197
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறத் தீர்மானித்துள்ள நிலையில், அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் உடன்பாடொன்றை எட்டுவதற்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் தெரேசா மேக்கு, ஐனநாயக ஒன்றியக் கட்சியே அழுத்தம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ஜனநாயக ஒன்றியக் கட்சி நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தபோது, ‘பிரித்தானியாவிலிருந்து வட அயர்லாந்து வித்தியாசமாக நடத்தப்படும் வகையில் அமையும் ஒப்பந்தத்தை எம்மால்  ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் உடன்பாடொன்றை எட்டுவதற்கு பிரதமர் தெரேசா மே முன்வர வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளது.

‘வட அயர்லாந்தில் பாரிய கட்சியாகவுள்ள ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவை பிரதமர் தெரேசா மே பெற்றுக்கொள்ள முற்பட வேண்டும்’ எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg