Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலவிதமான நோய்களை தீர்க்கும் வெந்தயக் கீரை

In
Published: 11:09 GMT, Dec 5, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Anojkiyan
Aesthetic_bunch_of_fenugreek_greens

பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கல்சியம் கிடைக்கிறது. அதனையும் தாண்டி வெந்தயக் கீரை பலவிதமாக நோய்களை தீர்க்கவல்லன.

உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற் பல விடயங்களுக்கு சிறந்த கீரை.

பித்தத்தை குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. காசநோய் கூட குணமாகும்.

வெந்தயக் கீரையின் இலைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனால், இரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறைகிறது. கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் எப்போதும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

மாதவிடாய் வலி, பிரச்சினைகளைப் போக்கும். 45வயதுக்கு மேற்பட்டப் பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு, அவர்களின் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். மனதுக்கும் உடலுக்கும் சக்தியைத் தரும்

உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.

வெந்தயக் கீரை, நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல், போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவும்.

அதிகளவு இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரத்தச்சோகை வராமல் தடுக்கும். இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும். வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இதனால் பருவ கால நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

சிறு நீரக பிரச்சனைகளை தடுக்கிறது. வெந்தயக் கீரை குளிர்ச்சியானது. சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்படுவது. உடலில் சேரும் தேவையற்ற கனிமங்களை வெளியேற்றுகிறது. இதனால் சிறு நீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)