Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியாவில் காட்டுத்தீ: ஒருவர் உயிரிழப்பு

In
Published: 10:55 GMT, Dec 5, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Suganthini
fire

அமெரிக்கா, கலிபோர்னிய மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மிக வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

இப்பகுதியில் ஒரே புகைமூட்டம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக விபத்துகள் சம்பவிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், சண்டா பவுலா (Santa Paula) மற்றும் வென்சுரா (Ventura)) ஆகிய பகுதிகளில் தீ பரவும் அபாயம் காணப்படுவதாகவும், உரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறிருக்க, கடந்த ஒக்டோபர் மாதம் கலிபோர்னியாவின் வைன்  பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)