Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடும்ப உறவுகளை கதையாக சொல்லும் அனிருத்!

In சினிமா
Updated: 18:27 GMT, Dec 5, 2017 | Published: 13:32 GMT, Dec 5, 2017 |
0 Comments
1256
This post was written by : Surenth

குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும் எனவும் அப்படியான ஒரு திரைப்படமே ‘அனிருத்’ எனவும் அந்தத் திரைப்படத்தின் இயக்குநரும் வசனகர்த்தாவுமான ஏ.ஆர்.கே. ராஜராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, குறித்த திரைப்படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏ.ஆர்.கே. ராஜராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ ‘தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை’ என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்தத் திரைப்படத்தின் கதை.

எம்மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக கொண்டுகொள்வதில்லை. அவர்கள் நம்மை விட்டு போன பிறகு அவர்களை நினைத்து வருத்துவோம்.

அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையாக உள்ளது” என ஏ.ஆர்.கே. ராஜராஜா குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg