Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகார்த்திகேயனுடன் போட்டி: சந்தானம்

In சினிமா
Published: 15:06 GMT, Dec 5, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Ravivarman
201712051255217648_Competiting-with-Sivakarthikeyan-is-always-Healthy-says_SECVPF

சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டி போட்டால் அதுவும் ஆரோக்கியமாகத் தான் இருக்கும் என நடிகர் சந்தானம் தெரிவித்தார்.

‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்திற்கு தான் ‘சக்க போடு போடு ராஜா’ படம் போட்டியாக இருக்கும் என்றார்.

விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என 5 நகைச்சுவை நடிகர்கள் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் முழு நகைச்சுவை விருந்தாகவே இருக்கும். அத்துடன் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்குத் தற்போதைக்கு இல்லை” என சந்தானம் மேலும் தெரிவித்துள்ளார்.

வி.டி.வி புரொடக்ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)