Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுயேட்சை இளைஞருக்கு ஆதரவு வழங்குவேன்: விஷால்

In இந்தியா
Published: 04:21 GMT, Dec 6, 2017 |
0 Comments
1370
icon_com
This post was written by : Puvanes
vishal001

சுயேட்சையாக போட்டியிடும் இளைஞரை ஆதரித்து அவரைவெற்றியடையச் செய்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் இதுபோன்றே நடக்கும், படத்தில் வருவதனைப் போன்று நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்படுகின்றன எனவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் சுயேட்சையாக ஒருவர் போட்டியிடக்கூடாதா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்ததோடு, எனது வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பது எனக்கே தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

என்னைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் இதற்கு பின்னணியில் செயற்படுபவர் யார் என்பதும் எனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட விஷால் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது வேட்புமனுவினை முன்மொழிந்தவர்களை மிரட்டியது மதுசூதனன் தரப்பா என்பது விசாரித்தால் தெரியவரும் எனச் சுட்டிக்காட்டிய விஷால், எவ்வாறாயினும் இளைஞர் ஒருவரை ஆதரித்து மக்களுக்கு நன்மை செய்வேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று சமர்ப்பித்த மனுவானது இரு தடைவைகளும் நிராகரிக்கப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)