Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோமேனிய மன்னர் மைக்கேல் காலமானார்

In
Updated: 10:14 GMT, Dec 6, 2017 | Published: 04:50 GMT, Dec 6, 2017 |
0 Comments
1204
This post was written by : Suganthini

ரோமேனியாவின் மன்னராக ஆட்சி புரிந்துவந்தவரும்   பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் உறவினருமான மைக்கேல் (Michael I) தனது 96ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக   புற்றுநோயால் அவதியுற்றுவந்த  இவர்,  சுவிற்சர்லாந்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இயற்கை எய்தியதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோமேனியாவில் மன்னராட்சி கம்பியூனிஸ்ட் அரசாங்கத்தால் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னராக,  1927ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டுவரையும் இதன் பின்னர், 1940ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரையும் இரண்டு தடவைகள் மன்னராக இவர் இருந்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் மைத்துனரான இவர், ரோமேனியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு ரோமேனியாவிலிருந்து வெளியேறி மேற்கத்தேய நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg