Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெலோ அமைப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சந்திப்பு!

In இலங்கை
Updated: 05:48 GMT, Dec 6, 2017 | Published: 05:16 GMT, Dec 6, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Elakkiya
02 (2)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள ரெலோ அமைப்பினர் இன்று (புதன்கிழமை) தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில், ரெலோ அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் ஜெனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், உதய சூரியன் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இன்று மாலைக்குள் ரெலோ தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)