Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உசைன் போல்ட்டுக்கு முதல்முறையாக முழு உருவ சிலை திறந்துவைப்பு!

In விளையாட்டு
Published: 07:17 GMT, Dec 6, 2017 |
0 Comments
1044
icon_com
This post was written by : Anojkiyan
usa

உலகின் அதிவேக மனிதராக வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட்டுக்கு முதல்முறையாக முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சர்வதேச மைதானத்துக்கு முன்னால் நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) ஜமைக்கா பிரதமர் ஆன்ட் ஹோல்னஸனால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.

‘மின்னல் போல்ட்’ என பெயரிடப்பட்டுள்ள, முழுவதும் வெண்கலத்தினாலான இந்த உருவச்சிலையை ஜமைக்காவின் பிரபல கலைஞரான பசில் வொட்சனினால் வடிவமைத்துள்ளார்.

இந்த மைதானத்தில் தான் உசைன்போல்ட், தனது 15 வருடங்களுக்கு முன் தேசிய சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் முதற் தடவையாக களமிறங்கி 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிற்கு காலடி எடுத்துவைத்தார்.

2008ஆம் ஆண்டு பீஜிங், 2012ஆம் ஆண்டு லண்டன் மற்றும் 2016ஆம் ஆண்டு றியோ ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களையும், 11 உலக சம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ள 31 வயதான போல்ட், 100 மீற்றர் ஓட்டத்தை 9.58 செக்கன்களிலும், 200 மீற்றர் ஓட்டத்தை 19.19 செக்கன்களிலும் ஓடி முடித்து உலக சாதனை படைத்தார் ஆவார்.

இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருடன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)