Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

In
Updated: 07:15 GMT, Dec 6, 2017 | Published: 07:15 GMT, Dec 6, 2017 |
0 Comments
1393
This post was written by : Suganthini

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸனை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட  ராஜதந்திரி  ஃபெட்ரிகா மொஹெரினி    (Federica Mogherini) பிரஸ்ஸல்ஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் ஜெருசலேமை தமது தலைநகரமென்று கூறிவரும் நிலையில், இப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். எனவே, இது தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை வழங்கும்’ என்றார்.

மேலும், ‘இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் சமாதானத்தை உருவாக்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை குறைத்து மதிப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் 28 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இதனையடுத்த சந்திப்பு, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு பலஸ்தீன ஜனாதிபதி முஹ்மட் அபாஸுடன் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg