Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாம் அரசியல் ஏமாளிகள் அல்லர் !

In இலங்கை
Updated: 17:43 GMT, Dec 6, 2017 | Published: 15:04 GMT, Dec 6, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : Ravivarman
tttttttttt

தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக செயற்படும் எம்மை அரசியல் ஏமாளிகள் என நினைத்தால் அதனால் ஏற்படும் முழுமையான விளைவுகளிற்கும் அவர்களே பொறுப்பு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை (புதன்கிழமை) இடம்பெற்ற அக் கட்சியின் தலமைகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நாம் தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளோடு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுவருகின்றோம். தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக பரந்துபட்ட ஆதரவுக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். ஆனால் எம்மை அரசியல் ஏமாளிகள் என நினைத்தால் அதனால் ஏற்படும் விளைவுக்களுக்கு அவர்களே பொறுப்பு.

இன்று நாம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ விடுதலைக் கழகம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகியோருடன் பேசியுள்ளோம். நாளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு பேசவுள்ளோம்.  எமது நீண்டகால அரசியல் பயணத்தில் இது ஒரு சாதாரண விடயமாகும்.

ஆனால் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் தேசியத்தின் ஒற்றுமை என்பது விளையாட்டுப் பந்தாக மாற்றமடைந்துவிடக் கூடாது என்பதை கூறிக்கொள்ளகின்றோம். இந்த நொடி வரை இதுவே எமது நிலைப்பாடு. ஆனால் எதிர்காலம் குறித்து ஆரூடம் கூற முடியாது” என குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)