Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2018 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளேன்: புடின்

In ஐரோப்பா
Published: 07:52 GMT, Dec 7, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Risha

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக, ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

வொல்கா நகரிலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி, அங்கு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ”ரஷ்ய கூட்டமைப்பின் ஜனாதிபதி பதவிக்கு நான் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன்.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இதனைவிட சிறந்த இடம் இல்லை. எனவேதான் நான் இந்த அறிவிப்பை இங்கு வைத்து வெளியிட்டேன். இதுவரை நீங்கள் எனக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி” எனக் குறிப்பிட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பொன்றில், 2018 தேர்தலில் விளாடிமிர் புடின் இலகுவாக் வெற்றிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)