Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தியது

In இலங்கை
Updated: 09:40 GMT, Dec 7, 2017 | Published: 09:40 GMT, Dec 7, 2017 |
0 Comments
1207
This post was written by : Puvanes

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேட்சை குழுவினர் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா்.

இதன்போது கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை குறித்த அமைப்பினர் செலுத்தியுள்ளனா்.

கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் அமைப்பின் உறுப்பினர் சுப்பையா மனோகரன் கருத்து தெரிவிக்கும் போது,

இந்த உள்ளுராட்சி தேர்தலில் நாங்கள் சுயேட்சையாக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றோம்.

தற்போதுள்ள நிலைமைகளின் படி இந்த உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாா் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்களுடைய அமைப்புக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவா்கள் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாத காரணத்தினால் ஏமாற்றமடைந்த மக்கள், தாமாக முன்வந்து ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்கான வேட்பாளர்களை வழங்கி அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றர்கள்.

எனவே கிளிநொச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாா் தலைமையிலான சுயேட்சை குழுவானது வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எமக்கு அதிக நம்பிக்கை உள்ளது என மனோகரன் தெரிவித்துள்ளார்.

chanrasegaran002 chanrasegaran003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg