Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீடற்ற அனைவருக்கும் புதிய வீடுகள்: பிரதமர்

In இலங்கை
Updated: 05:46 GMT, Dec 8, 2017 | Published: 02:17 GMT, Dec 8, 2017 |
0 Comments
1648
icon_com
This post was written by : Ravivarman
LoanAd

வீடுகளற்ற மக்களுக்கு எதிர்வரும் மூன்றாண்டுகளில் வீடுகளை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சேரி வீடுகளில் வசிப்போருக்கு முதல் கட்டமாக 20000 வீடுகள் வழங்கப்பட உள்ளதுடன், வடக்கின் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 50000 வீடுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட மக்களுக்காக 10000 வீடுகள் அமைக்கப்பட இருப்பதுடன், கிராமிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

மத்திய தரத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளை பெற்றுக் கொள்ள இலகு வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படும். இதற்கென தேசிய சேமிப்பு வங்கி 7500 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த வீட்டுத் திட்டத்திற்காக நான்கு அமைச்சுக்கள் இணைந்து செயற்படுவதுடன், தமது பங்களிப்பினையும் வழங்க உள்ளன. கடந்த அரசாங்கத்தில் நிதி வழங்கப்படாது இடைநிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)