Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதவி ஆசிரியர்களின் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு: மனோ

In இலங்கை
Published: 02:42 GMT, Dec 8, 2017 |
0 Comments
1081
icon_com
This post was written by : Ravivarman
image_1491752300-97602cced7

மலையக உதவி ஆசிரியர்களின் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் சமூக அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்திற்குப் பதிலளிக்கையில், ‘மலையக உதவி ஆசிரியர்களுக்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது அநீதியானது. மிகவும்வறுமையான சூழலிலேயே இவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொழில் கிடைத்தும் இவர்கள் குறைந்த கொடுப்பனவுடன் வறுமையில் வாழும் நிலை இவர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து வரவேற்கத்தக்கது. விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும். தீர்வுகாண பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அங்கம் வகிக்கிறது’ என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)