Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனின் சின்னம் குறித்து அறிவித்தது தேர்தல் ஆணையகம்!

In இந்தியா
Published: 05:08 GMT, Dec 8, 2017 |
0 Comments
1350
icon_com
This post was written by : Kemasiya
bfgbfg

ஆர்.கே.நகர். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு, பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் மாவட்ட தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) தேர்தல் ஆணையகம் வெளியிட்ட வேட்பாளர்கள் விபரத்தை தொடர்ந்து, தமிழக தேர்தல் ஆணையகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்த தேர்தல் ஆணையகம், “குலுக்கல் முறையில் தான் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

இதே வேளை தனது சின்னம் குறித்து தெரிவித்த டி.டி.வி.தினகரன் ,

“துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கவே பிரஷர் குக்கர் சின்னம் எமக்கு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் தினகரன் விண்ணப்பித்திருந்த தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர் கோரியிருந்த துடுப்புமட்டை மற்றும் விசில் ஆகிய சின்னங்களும் கிடைக்கப்பெறாத நிலையில்,  விண்ணப்பிக்காத சின்னத்தை முழுமனதோடு தினகரன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)