Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்லாமிய பயங்கரவாதம் வெறுமனே அச்சுறுத்தல் மாத்திரமல்ல: பொரிஸ் ஜோன்சன்

In
Updated: 16:27 GMT, Dec 8, 2017 | Published: 07:40 GMT, Dec 8, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : Elakkiya

இஸ்லாமிய பயங்கரவாதம் பிரித்தானியாவுக்கு வெறுமனே அச்சுறுத்தல் மாத்திரம் இல்லை என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது பொரிஸ் ஜோன்சன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேற்குலக வெளியுறவுக் கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு உரையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டனம் செய்த  பொரிஸ், பயங்கரவாதம் என்பது ஒரு நோய் என்றும்    அதிலிருந்து நாம் மேலெழ முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேலின் தலைநகரான ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை விமர்சித்த பொரிஸ் ஜோன்சன், மத்தியகிழக்கு பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த ட்ரம்பின் சில தீவிர அறிவிப்புக்களை காண உலகம் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பிரெக்சிற் தொடர்பாக கருத்துரைத்த பொரிஸ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்போது அதன் எல்லைகள், சட்டங்களுக்கான கட்டுப்பாட்டை பிரித்தானியா திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)