Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்வு திட்டத்தை நம்பியே வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கின்றோம் – எஸ்.வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 12:29 GMT, Dec 8, 2017 | Published: 09:22 GMT, Dec 8, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Arul Jesu
viyalandren

வடமேல் மற்றும் மேல் மாகாண அபிவிருத்திக்காக தனியான அமைச்சுக்கள் காணப்படும்போது யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு ஏன் தனியான அமைச்சை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 213 க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் மேலும் பலரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் நாடாளுமன்றத்தில் பலமுறை சுட்டிக்காட்டியும் வடக்கு,கிழக்கு இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக அவர் கூறினார்.

அதேபோல் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாத்திரமே 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான நேரம் அதிகளவில் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அனுமதி பெறப்படாமல் அது பறிக்கப்பட்டதன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)