Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு

In
Updated: 16:11 GMT, Dec 8, 2017 | Published: 11:09 GMT, Dec 8, 2017 |
0 Comments
1319
icon_com
This post was written by : Elakkiya
_99117901_snowbelfast

பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவின் பல பாகங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வருவதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வட அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளன. சுமார் 500 வீடுகள் மின்சார இணைப்பின்றி இருளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, குறித்த பகுதிகளில் பனி மற்றும் பனிப்பொழிவு காரணமாக மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்து, வடக்கு ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் வடபகுதி, மிட்லான்ட்ஸ் ஆகிய இடங்களில் 20 சென்ரி மீற்றர்வரை பனிபொழிவு ஏற்படும் என பிரித்தானியாவின் தேசிய வானிலை சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேவேளை வடகிழக்கு ஸ்கொட்லாந்தில் நாளை சனிக்கிழமை மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. உறைபனி வெப்பநிலை சனிக்கிழமையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)