Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல்வாதிகள் வெறும் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்: பார்த்தீபன் குற்றச்சாட்டு!

In இந்தியா
Published: 11:29 GMT, Dec 8, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Kemasiya
fhbfhgf

இந்திய மக்களிடம் வாக்குகளை கூட்டமாக ஏப்பமிடும் காக்கைகளாகவே அரசியல்வாதிகள் உள்ளனர் என, நடிகர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளை கடுமையாக சாடும் வகையில், “யாகாவாராயினும் நாகாக்க, அன்னியர் மீது பல்போட்டு பேசிய வாக்கை காக்க, எது பற்றியும் கவலை கொள்ளாமல் 64 வருடங்களாக இந்தியர்களின் வாக்குகளை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகளாக உள்ளனர் நம் அரசியல்வாதிகள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அதே பதிவில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ‘இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினால் ரவுடிகள், முறைகேடானவர்கள் கையில் அதிகாரம் செல்லும். தண்ணீர், காற்றுக்கு கூட வரி விதிக்கும் நிலைமை இந்தியாவில் உருவாகும்’ என கூறியதையும் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் இறங்கவுள்ளதாகவும், புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறிவரும் நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் குறித்த மனு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசியல்வாதிகளை குற்றம்சாட்டும் வகையில், பார்த்தீபனின் மேற்குறித்த கருத்து அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ghghjjmn

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)