Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் ஏவுகணை வளர்ச்சித் திட்டம்- ரஷ்யா கவலை

In உலகம்
Updated: 11:51 GMT, Dec 8, 2017 | Published: 11:51 GMT, Dec 8, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Elakkiya
45e7113f-677e-463c-9e5a-adcacfa2ccdf

புதிய எவுகணைகளை உருவாக்குவதற்காக அமெரிக்க இராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ரஷ்யா கவலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் அணுசக்தி அல்லாத வகையிலான குரூஸ் ஏவுகணையை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்திற்காக 58 மில்லியன் டொலர்களை ஒதுக்க அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்காவின் புதிய ஏவுகணை அபிவிருத்தித் திட்டமானது 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட இடைநிலை- தூர அணுவாயுத உடன்படிக்கையில் வொஷிங்டனின் உறுதிப்பாடு தொடர்பான கவலையை தோற்றுவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க பாதுகாப்பு செலவினங்களுக்கான வரவு செலவுத்திட்ட வரைபு தரைசார்ந்த ஏவுகணை வளர்ச்சியை அனுமதிப்பதாகவும் இதன்காரணமாக அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பான கவலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இடைநிலை- தூர அணுவாயுத உடன்படிக்கைக்கு ரஷ்யா உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதனை முழுமையாக செயற்படுத்துவதில் உறுதியாக இருந்ததாகவும் அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் மொஸ்கோ பதிலடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வரவு செலவுத்திட்ட இறுதி உரைக்காக காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)