Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடா்பான யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

In இலங்கை
Updated: 07:05 GMT, Dec 9, 2017 | Published: 03:43 GMT, Dec 9, 2017 |
0 Comments
1259
This post was written by : Arul Jesu
1512749919-hambantota-port-5

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு கையளிப்பதற்கான மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்டத்தின் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக் கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 72 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் ஐந்து உறுப்பினர்களும், கூட்டு எதிரணியை பிரதிநிதிதுவபடுத்தும் இருவரும் எதிராக வாக்களித்துள்ளனர்.

துறைமுக மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்வைத்த இந்த யோசனைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுக பணிகள், கூட்டு உடன்படிக்கைக்கு அமைய இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விஸ்தரித்து, அதனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஓஸ்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் கடந்த ஜீலை 29 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது.

இந்த நிலையில் மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்திற்கு அமைய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 65 மேலதிகவாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg