Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாரின் இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

In இலங்கை
Updated: 12:30 GMT, Dec 9, 2017 | Published: 12:30 GMT, Dec 9, 2017 |
0 Comments
1162
This post was written by : Ravivarman

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், தலைமையக பொலிஸ் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பெப்ரவரி 15ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என, பொலிஸ் மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg