Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக – மத்திய அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு!

In இந்தியா
Updated: 10:31 GMT, Dec 11, 2017 | Published: 10:06 GMT, Dec 11, 2017 |
0 Comments
1118
This post was written by : Kemasiya
dfd

காணாமல் போன மீனவர்களை கண்டறியும் விடயத்தில் இந்திய மத்திய அரசு அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்-

“காணாமல் போன மீனவர்களை கண்டறியும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட வேண்டும். ஆனால் குறித்த விடயத்தில், தமிழக அரசும் மத்திய அரசும் அசமந்தப்போக்குடன் காணப்படுகின்றன.

எனவே இதனை கண்டித்து, நாளை ஆளுநர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.   மேலும் மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஆளுநரிடம் நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg