Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘லிங்க்டின்’ மூலம் சீனா ஊடூருவதாக ஜேர்மனி குற்றச்சாட்டு

In ஐரோப்பா
Published: 11:20 GMT, Dec 11, 2017 |
0 Comments
1112
This post was written by : Suganthini
china

ஜேர்மன் நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களைத் சேகரிப்பதற்காக போலி ‘லிங்க்டின்’ சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக, ஜேர்மனியைச் சேர்ந்த புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

சுமார் 10 ஆயிரம் ஜேர்மனியர்களை இலக்குவைத்து, அவர்களை ரகசியத் தகவலாளிகளாக பணியமர்த்த இந்த வலையமைப்புத் தளத்தை சீனா பயன்படுத்துவதாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் போலிக் கணக்குகளையும் ஜேர்மனி வெளியிட்டுள்ளது. ஜேர்மனியின் மேல்மட்ட அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்தப் போலி கணக்குகள் மூலம் தெரியவருவதாகவும் அவ்வமைப்பின் தலைவர் ஹன்ஸ் கேயோக் மாசன் கூறியுள்ளார்.

இது நாடாளுமன்றங்கள், அமைச்சுகள் மற்றும் அரசாங்க அமைப்புகளில் ஊடூருவும் பாரிய முயற்சியெனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை சீனா ஏற்கெனவே மறுத்துள்ளது. ஆனால், ஜேர்மனியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் சீனா பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg