Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனிநபர் சுதந்திரத்தில் இந்தியா 100ஆவது இடம்!

In வணிகம்
Updated: 17:01 GMT, Dec 13, 2017 | Published: 05:49 GMT, Dec 13, 2017 |
0 Comments
1143
This post was written by : Kemasiya

வளம்மிக்க நாடுகளின் பட்டியலில், தனிநபர் சுதந்திரத்தில், இந்தியா 100 ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெகடும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான உலகளாவிய நாடுகளின் வளர்ச்சிநிலை குறித்த ஆய்வறிக்கையிலேயே,  மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளது.

இந்த அறிக்கை, பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கணக்கில் எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 104 காரணிகளின் அடிப்படையில் நாடுகள் மதிப்பிடப்பட்டன. இந்தியா பொருளாதார தரத்தில் 56ஆவது இடத்திலும்,  தொழில் தொடங்குவதற்கான சூழலில் 65ஆவது இடத்திலும்,  நிர்வாகத்தில் 41ஆவது  இடத்திலும்,  கல்வியில் 99ஆவது இடத்திலும்,  சுகாதாரத்தில் 109ஆவது இடத்திலும்,  பாதுகாப்பில் 134ஆவது இடத்திலும்,  தனி நபர் சுதந்திரத்தில் 100ஆவது இடத்திலும் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg