Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகரில் மக்கள் வீதிமறியல் போராட்டம்!

In இந்தியா
Published: 11:00 GMT, Dec 16, 2017 |
0 Comments
1206
This post was written by : Kemasiya
gnf

ஆர்.கே.நகர் பகுதியில் தேர்தலை முன்னிட்டு பணமோசடி இடம்பெற்றதாக சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள இப் போராட்டத்தினால், அப்பகுதியின் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு பொலிஸார் மற்றும் படையினர் தீவிர சோதனையை நடத்திவரும் நிலையில், இன்று சிலர் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் தேவையில்லாமல் சம்மந்தப்படாத இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்களை பொலிஸார் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg