Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது நடிப்பு பற்றி அறியாத ஒருவரால் இவ்வாய்ப்பு கிட்டியது: உதயநிதி

In சினிமா
Updated: 09:54 GMT, Dec 18, 2017 | Published: 09:54 GMT, Dec 18, 2017 |
0 Comments
1145
This post was written by : Risha

இயக்குநர் பிரியதர்ஷன், இதுவரை நான் நடித்த எந்த படத்தையும் பார்த்ததில்லை. பார்க்காததால் தான் என்னை வைத்து படம் இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘நிமிர்’ படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ” ‘நிமிர்’ அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன். பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், மகேந்திரன் சாருடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தணிக்கை கிடைத்த பிறகு எதிர்வரும் ஜனவரி 14 அல்லது 26ஆம் திகதி படம் வெளியிடப்படும்” என்றார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg