Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல்கள் செயலகத்தில் தனியான முறைப்பாட்டாளர் அலுவலகம்

In இலங்கை
Published: 10:06 GMT, Dec 18, 2017 |
0 Comments
1098
This post was written by : Arul Jesu
Election-Secretariat11

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அலுவலகங்கள் எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அலுவலகங்கள் அமைக்கப்படுவதன் மூலம் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் பதிவாகும் முறைபாடுகளை உடனடியாக விசாரணை செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இதுவரை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 492 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தேர்தலை முன்னிட்டு காட்சிப்படுத்தப்படும் பதாதைகள், சுவரொட்டிகள் என்பனவற்றை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg