Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இலங்கைத் தொழிலாளர் தேசிய காங்கிரஸ் இணைந்து போட்டி!

In இலங்கை
Updated: 11:20 GMT, Dec 18, 2017 | Published: 11:20 GMT, Dec 18, 2017 |
0 Comments
1293
This post was written by : Ravivarman

உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்போடு இலங்கைத் தொழிலாளர் தேசிய காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிற்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர் பெயர்ப்பட்டியிலில் தமிழ் வேட்பாளர்களை நீக்கியிருந்ததாகக் கூறியிருந்தார்.

நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே அவர்களதும் எங்களதும் வேட்பாளர் பட்டியலைத் தீர்மானித்தோம்.

அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளர்களை அவர்கள் கேட்ட தொகுதிக்கு இணங்க ஒதுக்கி கொடுத்துள்ளோம். அவர்கள் நாங்கள் கேட்ட ஆசனங்களுக்கான வேட்பாளர்களை கொடுத்துள்ளனர்” என எம்.ரமேஷ்வரன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg