Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்தது பேருந்து! – இருவர் உயிரிழப்பு, 44 பேர் படுகாயம்

In இலங்கை
Updated: 03:57 GMT, Dec 23, 2017 | Published: 03:57 GMT, Dec 23, 2017 |
0 Comments
1474
This post was written by : Puvanes

இரத்தினபுரி ஹம்பிலிபிட்டிய பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.

மாத்தறை – ஊருபொக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

60 பேர் பயணித்த குறித்த பேருந்து பாதையை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்தடைந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 41 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும், மூவர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்பதோடு படுகாயமடைந்தவர்களில் குழந்தை ஒன்றும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg