Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பளித்தமைக்கு எதிர்ப்பு

In உலகம்
Updated: 05:12 GMT, Dec 26, 2017 | Published: 05:12 GMT, Dec 26, 2017 |
0 Comments
1280
This post was written by : Suganthini

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்ட்டோ புஜிமோரிக்கு பொதுமன்னிப்பளித்தமைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கலவரம் வெடித்தது.

சிறைத்தண்டனை அனுபவித்துவந்த முன்னாள் ஜனாதிபதி புஜிமோரிக்கு, அந்நாட்டு ஜனாதிபதி பெட்ரோ பவ்லோ கீயுச்சென்ஸ்கி  (Pedro Pablo Kuczynski)   பொதுமன்னிப்பளித்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெருவின் தலைநகரான லிமாவில் நேற்று (திங்கட்கிழமை) புஜிமோரியின் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்ட பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கிடையிலும்  கலவரம் வெடித்ததுடன், பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் நடத்தினர்.

போலியான அரசியல் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக முன்னாள் ஜனாதிபதி புஜிமோரிக்கு பொதுமன்னிப்பளித்துள்ளதாக, ஆர்ப்பாட்டக்கார்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை புஜிமோரி ஜனாதிபதியாகப் பதவி வகித்துவந்தார். அக்காலப்பகுதியில் அவர் ஊழலில் ஈடுபட்டமை மற்றும் ஆட்சியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி புஜிமோரிக்கு 6 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2009ஆம் ஆண்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 25 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிறைத்தண்டனை அனுபவித்துவந்த புஜிமோரி, ரத்த அழுத்தம் மற்றும் அசாதாரண இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டதால், சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, 79 வயதான புஜிமோரியின் தேக ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி பெட்ரோ பவ்லோ கீயுச்சென்ஸ்கி நேற்றுமுன்தினம் பொதுமன்னிப்பளித்துள்ளார். இருப்பினும், இவருக்கு பொதுமன்னிப்பளித்தமைக்கு அந்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg