Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவில் புதையல்! – பொலிஸார் சுற்றிவளைப்பு

In இலங்கை
Updated: 14:43 GMT, Dec 26, 2017 | Published: 14:43 GMT, Dec 26, 2017 |
0 Comments
1968
This post was written by : Puvanes

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (திங்கற்கிழமை) குறித்த பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதுடன், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மாத்தறை, கொழும்பு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg