Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யாவில் வாகன விபத்து: 30 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 16:15 GMT, Dec 31, 2017 | Published: 10:37 GMT, Dec 31, 2017 |
0 Comments
1162
This post was written by : Suganthini

கென்யாவின் நாகுரூ – எல்டோரெட் நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கென்யாவின் மிகா (Migaa) பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. பயணிகள் பேருந்துடன் டிரக் வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 3 வயதுடைய பிள்ளையொன்றும் அடங்குகின்றது. படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடுமெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg