Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த தேர்தல் அரசாங்கத்திற்கு எதிரான தேர்தல்: மஹிந்த ராஜபக்ஷ கருத்து

In இலங்கை
Published: 02:23 GMT, Jan 1, 2018 |
0 Comments
1099
icon_com
This post was written by : Anojkiyan
mah

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அரசாங்கத்திற்கு எதிரான தேர்தல் என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்கல்லை பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி உறுதியான ஒரு வெற்றியை பெற்று கொள்ளும். நாட்டில் உள்ள வளங்கள் அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்கிறது.

இதனால் எஞ்சப்போவது எதுவும் இல்லை. எனவே, அடுத்த தேர்தல் அரசாங்கத்திற்கு எதிரான தேர்தல்” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg