Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயரமான மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!

In இந்தியா
Published: 04:45 GMT, Jan 1, 2018 |
0 Comments
1081
This post was written by : Ravivarman
201712312000412176_Sudarshan-creates-30-feet-Lord-Jagannath-sand-sculpture_SECVPF

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார்.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி பூரி கடற்கரையில் 30 அடி உயர ஜெகநாதர் சிற்பத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உருவாக்கியுள்ளதுடன், அந்த சிற்பத்தின் புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பூரி நகரில் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஜெகநாதர் மணற்சிற்பத்தை கண்டுகளித்ததுடன் அவரைப் பாராட்டியும் உள்ளனர்.

முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு பூரி கடற்கரையில் 25 அடி உயரமான ஜெகநாதர் சிற்பத்தை உருவாக்கி சாதனை படைத்திருந்தார்.

தற்போது 30 அடி உயரமான சிற்பத்தை உருவாக்கி அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg