Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவைகள் பாதிப்பு!

In இந்தியா
Updated: 06:19 GMT, Jan 1, 2018 | Published: 06:19 GMT, Jan 1, 2018 |
0 Comments
1305
This post was written by : Ravivarman

டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதுடன், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகனச் சாரதிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் அதிகபட்ச பனிமூட்டம் காணப்படுவதால், புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால்,இன்று டெல்லிக்கு வரும் 56 புகையிரதங்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 20 புகையிரதங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி நகரில் இம்முறை மிக அதிக அளவிலான பனிமூட்டம் நேற்று காணப்பட்டதால் டெல்லியில் இருந்து செல்லும் மற்றும் டெல்லிக்கு வரும் சுமார் 220 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg