கோஹ்லியால் போட்டியை இரத்து செய்த இந்திய கிரிக்கெட் சபை!

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டியை இந்தியக் கிரிக்கெட் சபை இரத்து செய்துள்ளது.
பயிற்சி போட்டியில் விளையாடுவதால் பயன் ஏதும் இல்லை என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளதாலேயே கிரிக்கெட் சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்களை தயார்படுத்திக்கொள்ளல் போன்ற முன்கூட்டிய தயார்படுத்தல்கள் கோஹ்லியின் முடிவால் தடைப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர்கள் கோஹ்லியை கடுமையாக சாடியுள்ளனர்.
தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.